விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (செப். 3) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ரசாயன மருந்து கலவை செய்யும் பணியின்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தில் சிக்கிய ஆண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆலையில் தொடர்ந்து வெடிகள் வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


















