கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் இயல்பான அளவைவிட வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















