தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 26 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், வேன், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணங்கள் வாகன வகை மற்றும் பயண முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படுகின்றன. அதன்படி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. சில சுங்கச்சாவடிகளில் மட்டும் அப்போது கட்டணம் மாற்றப்படாமல் இருந்தது.
தற்போது மீதமுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தக் கட்டண உயர்வால் தனியார் வாகன ஓட்டிகள், பேருந்து மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படும்.


















