தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து தவெக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை” என்று பேசினார் . இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கிறது என்று கூறிய தவெக எம்.எல்.ஏ.வின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


















