சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,120-க்கும், ஒரு கிராம் ரூ.14,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்திருந்த நிலையில், மாலையில் திடீரென ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது


















