தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாட நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கவும், லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கவும் காவல் நிலையங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர செலவின நிதியைப் பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய், 2026–27ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களுக்கான நிதி உயர்வு விவரம்
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய, நடுத்தர மற்றும் பெரிய காவல் நிலையங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
| காவல் நிலையங்கள் | பழைய மாதாந்திர நிதி | புதிய மாதாந்திர நிதி |
|---|---|---|
| சிறிய காவல் நிலையங்கள் (1,169) | ₹3,750 | ₹30,000 |
| நடுத்தர காவல் நிலையங்கள் (353) | ₹6,000 | ₹40,000 |
| பெரிய காவல் நிலையங்கள் (395) | ₹8,250 | ₹50,000 |
இந்த நிதி உயர்வுக்காக ஆண்டுதோறும் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்கு ரூ.71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




















