பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
இதய நோய் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கலைத்துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 2022-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


















