சென்னை மெரினாவில் உள்ள ஜெ.ஜெ. அம்மா மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் முழு உருவச் சிலையை தினமும் பராமரித்து, மாலை அணிவிக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
மேலும், சிலைக்கு பொதுமக்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தும் வகையில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும், பராமரிப்பு மற்றும் மாலை அணிவிக்கும் செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


















