பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
பூவிருந்தவல்லி பகுதியில் சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு மற்றும் குமணன்சாவடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















