• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

June 8, 2022
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

by Namadhu Amma
June 8, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலூர்,

மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை. இதனால் தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் பாதிரிகுப்பத்தில் உள்ள மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.காசிநாதன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணிமேகலை தஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடுகளை வழங்கி கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத ஆட்சியை ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார்.

கழக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் அனைவருக்கும் கொடுத்தோம். ஆனால் இப்போது தி.மு.க. அரசு பல கட்டுப்பாடுகளை போட்டு ஒரு சில குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே நலத்திட்டங்கள் கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். எனவே யார் சிறந்த ஆட்சியை கொடுத்தது என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் நலனில் சிறிதும் கூட அக்கறை இல்லாத ஆட்சியை ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார்.

கழக ஆட்சியில் கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டம், மானிய விலையில் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர சக்கர வாகனம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல திட்டங்களை இந்த மக்கள் விரோத அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்போம், மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இப்போது மக்கள் மனதில் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை வந்து இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை கழக செயலாளர்கள் கழகத்தை மேலும் வலுப்படுத்தி கழக ஆட்சி மலர பாடுபட வேண்டும்.

இவ்வாறு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.