80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் எல்லை பகுதிகள், முக்கிய அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே 3 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் நிலையில், தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, ஆகஸ்ட் 20ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




















