விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவிப்பு…2026 – 27 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று இன்று தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கான குறுகிய கால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2026-2027-ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பயிர்க்கடன் வழங்கப்படும்.கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு. தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர்களின் குறுகிய காலக் கடன் தேவைகளுக்கு 2026-2027-ஆம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனக் கடன் வழங்கப்படும்.
விவசாய நிலமற்ற பட்டியல் இனத்தவருக்கு வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வாங்க மற்றும் பராமரித்திட, கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம் சார்ந்த மத்தியக் காலக் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு மூலதனக் கடன்கள் வழங்கப்படும் என்றார்.




















