ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நாங்கள் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு இரு குழுக்களாக ஆகஸ்ட் 17, 18 சென்னையிலிருந்து புறப்பட்டு காத்மண்டு வந்தடைந்தோம். தற்போது இந்த வெள்ளப்பெருக்கு குறித்து கேள்வி பட்டோம். இதில் பல வெளிநாட்டவர்களும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளதை கண்டு கவலையடைந்துள்ளோம்.
நாங்கள் 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 150 பேர் சாகாவில் மிகுந்த பாதுகாப்பாக உள்ளோம்.இங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து அரசுடன் ஆலோசித்து வருகிறோம். அனுமதி கிடைத்த உடன் விரைவில் தாயகம் திரும்புவோம்” என தெரிவித்துள்ளார்.


















