• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

May 5, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

by Namadhu Amma
May 5, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேனி,

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார்.

தேனியில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சுப்புரத்தினம், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தலைமை கழக பேச்சாளர்கள் சந்தானம், கோவை தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் மற்றும் நிதி திட்டம், உழைக்கின்ற வர்க்கம் வயிராற உண்ண வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம், குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். அம்மா உணவகத்தை படிப்படியாக நிறுத்தி வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, கலை கல்லூரிகளை துவக்கி, தேனி மாவட்டத்தில் இல்லாத கல்வி நிறுவனங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியது கழக அரசு.

தி.மு.க.வுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் தொழிலாளர்கள் தினத்தை கொண்டாட தகுதியே இல்லை. கேரளாவை கம்யூனிஸ்ட் ஆளுகிறது. தமிழகத்தில் கூட்டணியில் உள்ளனர். ஜான் பென்னிகுயிக் அவர்களால் தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக கட்டப்பட்ட முல்லை பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கவும் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை நீரை தேக்கிட உச்சநீதிமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்தார்.

ஆனால் பேபி அணையை பலப்படுத்த தடையை ஏற்படுத்தி, முல்லை பெரியார் அணை பலமில்லை, உடைந்து விடும் என பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி ஆதாயம் பெற்று வரும் கம்யூனிஸ்டு அரசு மற்றும் அணை பிரச்சினையில் ஆதாயம் தேடும் தி.மு.க. அரசு தமிழக மக்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருகிறது.

இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியான மகளிருக்கு மாத உரிமை தொகை ரூ.1000 வழங்கவில்லை. எப்பொழுது வழங்கினாலும் ஆட்சி அமைந்ததிலிருந்து கணக்கிட்டு மொத்தமாக வழங்க வேண்டும்.

மதுரை-போடி ரயில் திட்டம் குறித்து பாரத பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் பேசியதன் காரணமாக ரூ.200 கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கி தேனி வரை பணிகள் முடிவடைந்து விரைவில் ரயில்சேவை துவங்க உள்ளது.

அதுபோல் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். இவ்வாறு தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசினார். இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.