• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கிறது தி.மு.க அரசு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

May 17, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கிறது தி.மு.க அரசு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

by Namadhu Amma
May 17, 2022
in தமிழகம்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர், காவல்துறையினர், பாமர மக்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில், அரசுப் பேருந்தின் நடத்துனர், பயணியர் ஒருவரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள் அன்றாடம் நடந்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மதுராந்தகம் புறவழிச்சாலை நிறுத்தித்தில் நின்றபோது முருகன் என்ற பயணி பேருந்தில் ஏறியதாகவும், அவரை டிக்கெட் எடுக்க சொல்லி நடத்துனர் பெருமாள் கேட்டபோது,

மது போதையில் இருந்த அந்தப் பயணி நடத்துனரை ஒருமையில் திட்டி தாக்க முற்பட்டதாகவும், பயணிகள் தடுத்து நிறுத்தியும் நடத்துனரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாகவும், திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் மதுபோதையில் இருந்த பயணி நடத்துனரை தாக்கியதன் காரணமாக நடத்துனர் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகவும், நிலை குலைந்து கீழே விழுந்த நடத்துனரை உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அருகில் உள்ள மேல்மருவத்தூர்

ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த செய்தி மிகுந்த மனவேதனையை எனக்கு அளித்துள்ளது. உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்கள் இருக்கின்ற ஒரு பேருந்திலேயே இதுபோன்ற தாக்குதல் நடக்கிறது என்றால், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணவே அச்சமாக இருக்கிறது.

அரசுப் பேருந்து நடத்துனர் பெருமாள் மரணத்திற்கு மது ஒரு காரணமாக இருந்தாலும், காவல்துறையினர் மீது இருந்த ஓர் அச்சம் தற்போது இல்லை. இதற்கு காரணம் காவல்துறையினரே பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுவதும், அதற்குப்பின் அரசியல் தலையீடு இருப்பதும் தான்.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதாகவும், சென்னை போதைப்பொருளின் விற்பனை சந்தையாக மாறிவிட்டதாகவும், காவல்துறையினரே அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக பத்திகைகளில் செய்தி வரும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற இந்த வேளையில், முதலமைச்சர் உட்கட்டமைப்பில் உலகத்தரம், கல்வி, அறிவாற்றலில் பேராளுமைத் திறம், அன்றாட தேவைகளில் மக்களுக்கு மன நிறைவு, தொய்வு இல்லாத தொழில் வளர்ச்சி, அனைத்து சமூகத்தவர்களுக்கான மேம்பாடு, நிதி, சட்டம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஆகிய ஆறு இலக்குகளை வைத்து செயல்படுவதாக தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் பேசி இருக்கிறார். ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கு அடித்தளமாக விளங்குவது சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்பதை முதலமைச்சர் மறந்து விட்டார்.

மேற்காணும் இலக்குகள் எய்த வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் தலையீடு தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

இது தவிர, மதுக்கூடங்களை அமைக்க ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை என்றைக்கு நடைபெறுகிறதோ அன்றைக்குத்தான் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த நடத்துனர் பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டாலும், பணியில் ஈடுபட்டு இருக்கும் போது தாக்கி கொலை செய்யப்பட்டது மற்றும் அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும்,

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், தமிழ்நாட்டில் தாண்டவமாடும் ரவுடிகளின் ராஜ்யத்தை, சமூக விரோதிகளின் சாம்ராஜ்யத்தை, வன்முறையாளர்களின் வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.