கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றியை நெருங்கியுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 503/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 229/6 ரன்கள் எடுத்து 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சூரியபண்டாரா 92 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 55 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கையின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி, குறைந்த இலக்கை எளிதாகத் துரத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றால், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றும்.


















