கொழும்பில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் மீண்டும் சதம் அடித்து அசத்தினார். அவர் 117 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். இதன்மூலம் இலங்கை தொடரில் தொடர்ந்து 2-வது சதத்தை பதிவு செய்தார்
இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுப்மன் கில் 50 ரன்களும், ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ஜடேஜா 43 ரன்களும் சேர்த்தனர். இதனால் கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது..


















