மதுரையில் ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால், 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிலோ அல்லது 1930 என்ற இலவச உதவி எண்ணிலோ புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் முதலீட்டுச் செயலிகளை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மதுரை மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.


















