சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும், கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.14,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,290-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனையானது. ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 அதிகரித்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலையும் ஒரே நாளில் உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோரிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


















