• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

அ.தி.மு.க. படைத்த சாதனையை தான் செய்தது போல் காட்டிக்கொள்கிறது தி.மு.க.

December 13, 2021
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

அ.தி.மு.க. படைத்த சாதனையை தான் செய்தது போல் காட்டிக்கொள்கிறது தி.மு.க.

by Namadhu Amma
December 13, 2021
in சிறப்பு செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை,

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்யமான சமுதாயத்தால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிதாக மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கவும் எடுக்கப்பட்ட முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே மிக சிறப்பானதொரு சாதனையை எய்தியதோடு மட்டுமல்லாமல் உலகத்தின் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 593 மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 69 மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 45,698 மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 10,375 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 312 அரசு கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 37 அரசு கல்லூரிகள் இருப்பதாகவும், மொத்தமுள்ள 22,933 மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 5,125 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும், தேசிய மருத்துவக்குழு தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதற்கு காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தான் என்பதை ஆணித்தரமாக நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1954-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் எட்டு மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதனையடுத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில், ஈரோடு, கன்னியாகுமரி, தேனி, வேலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை, கோயம்புத்தூர், என எட்டு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் துவங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து அம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களின் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டன. மருத்துவத்திற்கென தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகம் என்ற தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான்.

இது தவிர, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில், 2019-ம் ஆண்டு மத்திய அரசின் 60 விழுக்காடு நிதியுதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க மத்திய அரசின் ஆணையை பெற்று, அதற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி ஒரு சரித்திர சாதனையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு படைத்தது. இதன் விளைவாக ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் 150 இடங்கள் என 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டு கால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மட்டும், புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகளை துவங்கிய வகையில் 700 இடங்கள், ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடங்களை உயர்த்திய வகையில் 650 இடங்கள், புதிதாக அனுமதிக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் மூலம் 1,650 இடங்கள் என 3,000 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, “முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகத்தில் அதிக மருத்துவக்கல்லூரிகள்” என்று பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தி கொள்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் படைத்த சாதனையை தன் சாதனை போல் காட்டிக்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சிக்கு வந்து ஆறு மாதமே ஆகியுள்ள நிலையில் இத்தனை மருத்துவ இடங்களை உருவாக்க முடியுமா என்பதை மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். மக்களுக்கு உண்மை எது என்பது நன்கு தெரியும். இனி வருங்காலங்களிலாவது, “உண்மை எனும் கைவிளக்கே சான்றோர்க்கு வழிகாட்டும் விளக்கு” என்பதற்கேற்ப தி.மு.க. நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.