• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
‘தி டார்க் ஹெவன்’ – திரைவிமர்சனம்

‘தி டார்க் ஹெவன்’ – திரைவிமர்சனம்

September 19, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment

‘தி டார்க் ஹெவன்’ – திரைவிமர்சனம்

by Admin
September 19, 2026
in Entertainment, Movie, தமிழகம்
0
‘தி டார்க் ஹெவன்’ – திரைவிமர்சனம்
509
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

மலைகளால் சூழப்பட்ட ‘மேக்கரை’ கிராமம். அங்கு தலைமுறை தலைமுறையாக பேசப்படும் காட்டுத் தெய்வத்தின் சாபம். அதைச் சுற்றி நிகழும் மர்ம மரணங்கள். எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்கும் விசித்திரமான புத்தகம். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது உருவாகிறது ‘தி டார்க் ஹெவன்’.

மேக்கரை கிராமத்தின் நூலகர் ஒருவர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகத்தைக் கண்டெடுக்கிறார். அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதும், அதில் எழுதப்பட்டிருப்பவை வெறும் கதைகள் அல்ல என்பது தெரிய வருகிறது. இனி நடக்கப்போகும் சம்பவங்கள், குறிப்பாக ஒருவரின் மரணம், அது எப்போது நிகழும், யாரால் நிகழும் என்பது வரை அதில் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கிறது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு, நூலகராக பணிபுரிந்த திடீரென்று காணாமல் போன  தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள அவரது மகள் மேக்கரைக்கு வருகிறார். அதே நேரத்தில், காட்டுத் தெய்வத்தின் சாபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தொடர் மரணங்களை விசாரிக்க காவல் அதிகாரி சித்து அந்த மலைக்கிராமத்திற்கு வருகிறார்.

சித்து பொறுப்பேற்ற நாளிலிருந்தே அடுத்தடுத்து கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. விசாரணை தீவிரமடைய, ஒரு மனநலம் பிறழ்ந்த கொலையாளி மீது சந்தேகம் திரும்புகிறது. ஆனால், உண்மையான கொலையாளி யார்? மேக்கரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன? அந்த மர்மப் புத்தகத்தின் பின்னணி என்ன? காட்டுத் தெய்வத்தின் சாபம் உண்மையா? என்ற கேள்விகளுடன் கதை பரபரப்பாக நகர்கிறது.

முதல் பாதி – மர்மமும் பதற்றமும்!

இயக்குநர் பாலாஜியின் தெளிவான கதை சொல்லல் மற்றும் மிரட்டலான திரைக்கதை படத்தின் முதல் பாதிக்கு வலுசேர்க்கிறது. கதை மெதுவாக நகர்ந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். மலைக்கிராமத்தின் தனிமையான சூழலும், தொடர்ந்து நிகழும் மர்ம சம்பவங்களும் படத்திற்கு கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் சித்து, காவல் அதிகாரி கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார். தர்ஷிகா, ரித்விகா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் அளவான நடிப்பை வழங்கியுள்ளனர். நிழல்கள் ரவி, வேலா ராமமூர்த்தி, அருள் டி. சங்கர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களின் சந்தேகத்தை தொடர்ந்து அவர்கள் பக்கம் திருப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத்தில் மிரட்டல்!

மணிகண்டன் பி.கே.வின் ஒளிப்பதிவு படத்தின் மலைப்பகுதி காட்சிகளுக்கு மர்மமான மற்றும் மிரட்டலான தோற்றத்தை வழங்குகிறது. இருள் சூழ்ந்த மலைப்பாதைகள், கிராமத்தின் தனிமை, கொலை நடைபெறும் இடங்கள் என ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை உணர முடிகிறது.

ராஜா ஆறுமுகத்தின் படத்தொகுப்பு இன்னும் சற்று வேகமாக இருந்திருக்கலாம். இருப்பினும், படத்தின் பல காட்சிகளை விறுவிறுப்பாக மாற்றுவதில் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மர்மம் வெளிப்படும் தருணங்களில் இசை பதற்றத்தை அதிகரிக்கிறது.

குற்றப் பின்னணியிலான திரில்லர் படத்துக்குத் தேவையான பல அம்சங்கள் இருந்தாலும், மர்மப் புத்தகம், நூலகர், காட்டுத் தெய்வத்தின் சாபம், தொடர் கொலைகள், மனநலம் பிறழ்ந்த கொலையாளி என பல கதை இழைகள் ஒரே நேரத்தில் பயணிப்பது சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சில முடிச்சுகள் இரண்டாம் பாகத்துக்காக திட்டமிட்டு விடப்பட்டிருப்பது தெரிகிறது. முதல் பாகம் ஒரு முக்கியமான கதைக்கருவை மட்டும் மையப்படுத்தியிருந்தால், பார்வையாளர்களின் ஈடுபாடு இன்னும் அதிகரித்திருக்கும்.

கிளைமாக்ஸ் – யார் கொலையாளி?

படத்தின் மிகப்பெரிய பலம், இறுதிவரை கொலையாளி யார் என்பதை எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான். பார்வையாளர்களை தொடர்ந்து வேறு ஒரு நபர் மீது சந்தேகம் கொள்ளச் செய்வதும், இறுதிக்கட்டத்தில் அந்த சந்தேகத்தை மாற்றுவதும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.

சில குறைகள் இருந்தாலும், மர்மம், பதற்றம், தொடர் கொலைகள், கணிக்க முடியாத திருப்பங்கள் என ஒரு கிரைம் த்ரில்லருக்கான சுவாரசிய அம்சங்களை கொண்டிருக்கிறது ‘தி டார்க் ஹெவன்’. எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை இறுதி வரைக்கும் சீட்டின் நுனியில் அமர்ந்திருக்கும் வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் – மர்மத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ‘தி டார்க் ஹெவன்’ ஒரு சுவாரசியமான திரில்லர் அனுபவம்.

Share204Tweet127
Admin

Admin

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.