கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்
‘சிறை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. கிரைம் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் எச். வினோத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
படத்தில் LK அக்ஷய் குமாருடன் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
சென்னை, கொடைக்கானல், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ‘ராவடி’ படத்துக்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் LK அக்ஷய் குமார் நடிப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





















