திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம், உடல் ஊனமுற்றால் ரூ.5 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ரூ.50 ஆயிரம் வரை உதவி வழங்கப்படும்.
மேலும், திருமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கான பிரீமியத்தை தேவஸ்தானமே எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு செலுத்தும் என்பதால், பக்தர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.





















