ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
வீராங்கனைகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி, மனஉறுதி மற்றும் அபாரமான திறமைக்கு கிடைத்த வெற்றியாக இந்தச் சாதனை அமைந்துள்ளது.
தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கபடி அணியின் வெற்றிப் பயணம் மேலும் பல சாதனைகளுடன் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!





















