ஃபஹத் ஃபாசில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. பேண்டஸி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். கால பைரவா இசையமைத்துள்ளார்.
‘ஷோயிங் பிசினஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.எஸ். கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

மந்திரவாதியாக ஃபஹத்
படத்தில் சூரி என்ற மந்திரவாதி கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். டீசரில், அவர் சிறுமி ஒருவருக்கு மந்திர வித்தைகளை செய்து காட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, அந்த சிறுமியை மறையச் செய்வதாகக் கூறி மற்றொரு பெரிய மந்திர வித்தையை செய்து காட்டுவதாக ஃபஹத் ஃபாசில் உறுதி அளிக்கிறார். ஆனால், அதன்பிறகு அவருக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்படுகிறது.
அந்த சிக்கல் என்ன? அதனால் மந்திரவாதியின் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நடைபெறுகின்றன? என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





















