சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்று (அக்டோபர் 30) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,226 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000 ஆக உள்ளது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.





















