தமிழகத்தில் அரசு வேலைக்காக TNPSC தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின்படி குரூப் 1, குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான புதிய வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினர், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. குரூப் – 1 தேர்வுகள்
| பிரிவினர் | பழைய வயது வரம்பு | புதிய வயது வரம்பு |
|---|---|---|
| பொதுப்பிரிவினர் | 32 | 37 |
| BC, MBC, SC, ST | 37 | 42 |
| மாற்றுத்திறனாளிகள் – பொதுப்பிரிவு | 42 | 47 |
| மாற்றுத்திறனாளிகள் – இடஒதுக்கீட்டுப் பிரிவு | 47 | 52 |
2. குரூப் – 2 மற்றும் 2A தேர்வுகள்
| பிரிவினர் | பழைய வயது வரம்பு | புதிய வயது வரம்பு |
|---|---|---|
| பொதுப்பிரிவினர் | 30 | 35 |
| இடஒதுக்கீட்டுப் பிரிவினர் | உச்ச வயது வரம்பில்லை | தொடர்கிறது |
| மாற்றுத்திறனாளிகள் – பொதுப்பிரிவு | 40 | 45 |
| மாற்றுத்திறனாளிகள் – இடஒதுக்கீட்டுப் பிரிவு | உச்ச வயது வரம்பில்லை | தொடர்கிறது |
3. குரூப் – 4 தேர்வுகள்
| பிரிவினர் | பழைய வயது வரம்பு | புதிய வயது வரம்பு |
|---|---|---|
| பொதுப்பிரிவினர் | 30 | 35 |
| உயர்கல்வித் தகுதி பெற்ற பொதுப்பிரிவினர் | 32 | 37 |
| BC, BCM, MBC, DNC | 32 / 40 | 37 / 45 |
| SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் | 35 / 45 | 40 / 50 |
5 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு
இந்த அறிவிப்பால் வயது வரம்பு காரணமாக இதுவரை TNPSC தேர்வுகளை எழுத முடியாமல் இருந்த பல தேர்வர்களுக்கு மீண்டும் அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.





















