தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று செப்.15 நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
வரும் 16 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும், குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





















