தமிழ்நாட்டில் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,011.20 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 33 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிக காற்றாலை மின் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநிலத்தில் 9,527 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், சீசன் காலத்தில் தினசரி சராசரியாக 8 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்ததாகவும், வரும் நாட்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












