நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை மேற்கொண்டு விசாரிக்கவோ, தொடரவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்து நோக்கங்களுக்காகவும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசுகள் உரிய முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதேவேளை, ஏற்கனவே கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.


















