காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.47 அடியாகவும், நீர் இருப்பு 53.70 டி.எம்.சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















