தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 27) ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளையும் (ஆகஸ்ட் 28) தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின்போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





















