டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, 7-ம் நிலை ஜப்பான் ஜோடியான ரின் இவானகா – கீ நகனிஷியை 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப் – யாப் ராய் கிங் ஜோடியை 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
அதேநேரம், மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஷீ யியிடம் 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையரில் ஆயுஷ் ஷெட்டியும், கலப்பு இரட்டையரில் தனிஷா கிரஷ்டோ – துருவ் கபிலா ஜோடியும் தோல்வியடைந்தார்.


















