ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கள்ளக் கடல் சீற்ற நிகழ்வுக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஆக.20) நாளை வரை விடுத்துள்ளது.
இந்நிலையில், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் கேரளம், தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு கள்ளக்கடல் நிகழ்வு இன்று (புதன் கிழமை) முதல் ஆக.20ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்கள் அனைவரும் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது எழும் அலைகளின் சீற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.


















