கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
மதுரை, செப்.30-
2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த விடியா ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகிய மூன்று பேரும் மும்மூர்த்திகளாக இருந்து மதுரை மாவட்டத்தை கோட்டையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை
தோற்றுவித்தார்.
புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை கண்ணை இமை காப்பது போல இந்த இயக்கத்தை கட்டிக் காத்தார். இன்றைக்கு மதுரை மாவட்டம் என்றாலே அது கழகத்தின் எஃகு கோட்டை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 50 சதவீத அளவிற்கு இங்கு வெற்றிபெற்றுள்ளோம்.
10 தொகுதியில் 5 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். இதேபோல தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றிருந்தால் கழக
ஆட் சிதான் வந்திருக்கும். சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தினாலே அந்த இடத்தை திமுக கைப்பற்றி விட்டது. நாம் சற்று ஏனோ தானோ என்று இருந்த காரணத்தினாலே அந்த இடத்திற்கு திமுக வந்து விட்டது. திமுக பெரும்பான்மையான இடத்திற்கு வரவில்லை. 125 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் தமிழகத்தின் நிலை அப்படிதான் உள்ளது. இப்போது இருக்கின்ற முதலமைச்சர் திறமையில்லாத முதலமைச்சர்.
நான் அனைத்து பொதுக்கூட்டத்திலும் பேசி வருகிறேன். பொம்மை முதலமைச்சர். பொம்மைக்கு சாவி கொடுத்தால் ரவுண்டு அடித்துக்கொண்டே இருக்கும். காலையில் கீ கொடுத்து விட்டு மாலை வரை தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருப்பார்.
இவர் ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகிறது. எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள்.அதனால் மக்களுக்கு என்ன நன்மை
கிடைத்தது. நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை. அவதூறாக பேசவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் வாக்களித்துத்தான் இன்றைக்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு வந்திருப்பார்கள்
வாக்களிக்கவில்லை. பெரும்பான்மையான மக்கள் மக்கள் வாக்களித்து விட்டார்கள். தவறி வாக்களித்து விட்டார்கள். இப்போது எண்ணி எண்ணி வருத்தப்படுகிறார்கள்.
நாம் தவறு செய்துவிட்டோம். கழக ஆட்சியில் கிடைத்த நன்மைகள் திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை. இப்படி
வருத்தப்படுகிறார்கள். வேதனைப்படுகிறார்கள். ஏன் திமுகவினரே சொல்கிறார்கள். திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுக ஆட்சி எப்போது போகும், எப்போது கழக ஆட்சி வரும் என்று அவர்களே பேசுகிறார்கள். அவர்களுடைய சொல் காதில் கேட்கிறது என்று நம்முடைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
2011-21 வரை கழக ஆட்சி நடந்தது. அம்மா இருக்கும் போதும் சிறப்பான ஆட்சி. அம்மாவின் மறைவுக்கு பிறகும் சிறப்பான ஆட்சி. நான் முதலமைச்சராக இருக்கும்போது ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியுள்ளேன். எங்காவது அரசைக் குறை சொல்லிப்பேச முடியுமா.அவ்வளவு நன்மைகள் மக்களுக்கு கிடைத்தன. இந்த மதுரை மாவட்டத்திற்கு மட்டும் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஏன் என்றால் இங்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். வெளிநாட்டில் படித்து வந்தவர். மிக மிக அறிவு ஜீவி, அவருக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறது என்று நினைக்கிறார். நமக்கு எல்லாம் இல்லை என்று நினைக்கிறார். அதனை மறந்துவிட்டு கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, நீங்கள் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீதியில் நடந்து சென்றால் உங்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டு உங்கள் காலத்தில் இந்த திட்டம் வந்தது என்று சொல்லுகின்ற அளவுக்கு நன்மை செய்யுங்கள். அது எங்களுக்கு கிடைத்துள்ளது. அதைத்தான் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டார்.
இந்த மதுரை மாவட்டத்திற்கு, மதுரைக்கு ஏராளமான திட்டங்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்தி இந்த கூட்டத்திலே பேசுகிறோம் என்றால் எங்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்ட திட்டம் மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. அதனால் மக்கள் நன்மை பெற்றுள்ளார்கள். அதனால் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடத்தில் சாதனையை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
உங்களுக்கு தைரியம் இருந்தால் 16 மாத திமுக ஆட்சியிலே என்ன திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறோம், எந்த திட்டத்தை செயல்படுத்தினோம், அதனால் இந்த நாட்டு மக்களுக்கு என்ன நன்மை என்பதை நீங்கள் வெளிப்படையாக பேசுங்கள். ஒன்றும் கிடையாது. ஒன்று இரண்டு
செய்துள்ளார்.
ஸ்டாலின் முதலமைச்சராக வந்தவுடன் அவருடைய அப்பாவுக்கு நினைவு மண்டபம் கட்டுகிறார். அவருடைய அப்பா பெயரில் இங்கு ஒரு நூலகத்தை அமைக்க முயற்சி செய்து வருகிறார். எழுதாத பேனாவை கடலில் கொண்டுபோய் வைக்கிறார். பூமியில் வைத்தால் அந்த பேனாவைத் திருடிச் சென்று விடுவார்கள் என்று கடலில் வைக்கிறார். இதுதான் அவர் செய்த சாதனை.
அதிலும் ஒரு சுயநலம். கருணாநிதி புகழுக்கு இதுபோன்ற செயல்களை செய்துள்ளாரே தவிர மக்களுக்கு கிடையாது. மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அம்மா இருக்கும்போது தென் மாவட்டத்திலே 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முல்லை பெரியாரின் அணை மட்டத்தை உயர்த்தியது கழக அரசு. 136லிருந்து 142 அடியாக உயர்த்தினோம்.
அணையைப் பலப்படுத்திய பிறகு 152 உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பை பெற்றுதந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலையான நீர் கிடைக்க செய்த அரசு அம்மாவின் அரசு. மதுரை மாநகராட்சியை சீர்படுத்த 25 கோடி. உலக தமிழ்ச்சங்க பெருந்திட்ட வாளகம் 38 கோடியில் உருவாக்கியது கழக அரசு.செயற்கை இழை கால்பந்து மைதானம் ரூ. 6 கோடியில் அளித்திருக்கிறோம்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ரூ.9 கோடியில் உருவாக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை சுமார் 13 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் உபகரணங்கள், தனியார் மருத்துவமனையில் என்ன சிகிச்சை கிடைக்கின்றதே அதைவிட
நவீன முறையிலே உயர்தர சிகிச்சை தந்த அரசு அம்மாவின் அரசு.
ரூ. 150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனையை நாங்கள் தான் அளித்தோம். சுமார் ரூ. 325 கோடியில் உயர்தர அறுவை சிகிச்சை தியேட்டர், உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த மாவட்டம் வேளாண் மக்கள் நிறைந்த மாவட்டம்.
உழைப்பாளிகள், ஏழைகள் நிறைந்த மாவட்டம். இவர்களுக்கு மருத்துவச்சிகிச்சை அளிப்பதற்காக அம்மா அரசுஉருவாக்கி அளித்துள்ளது. உங்களால் ஒன்று சொல்ல முடியுமா. உங்கள் தந்தை பெயரிலே நூலகத்தை அமைக்கிறீர்கள். அதுதான் நீங்கள் செய்தது.
வேறு எதுவும் கிடையாது. இந்த மதுரை மாவட்டத்திலே ஏழை மக்களுக்காக எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். மதுரை மாவட்டம் உத்தங்குடி மீனாட்சி மருத்துவமனை முதல் கப்பலூர் திருமங்கலம் வரை 209 கோடியில் நான்கு வழிச்சாலை. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இன்றைக்கு புறநகர் பகுதி வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக நான்கு வழிச் சாலையை உருவாக்கி அளித்ததும் அம்மா அரசு.
மதுரை மாவட்ட சீர்மிகு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 975 கோடி, மத்திய , மாநில அரசு நிதியிலிருந்து அளித்தோம். பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு மதுரை வளர்ச்சிக்காக கொண்டு வந்த திட்டம் இது. ரூ.30 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
முன்னதாக விழா மேடை அருகே கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஏற்பாட்டில் ராட்சத கிரைன் மூலம் பிரம்மாண்டமான மாலை எடப்பாடியாருக்கு அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழா மேடை அருகே மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் உறுதி சார்பில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில், வீற் கொண்டு செயலாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது
பொதுக்கூட்ட மேடையில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியொர் திருவுருவப்படத்திற்கு எடப்பாடியார் மரியாதை செய்தார்.
பொதுக்கூட்ட மேடையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் எடப்பாடியாருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


















