• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்= முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரை

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்= முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரை

September 21, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்= முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரை

by Namadhu Amma
September 21, 2022
in தற்போதைய செய்திகள்
0
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்= முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரைத்துள்ளார்.

சிவகங்கை சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பாக, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் உள்ள மதகுபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிவகங்கை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் விசிபி.கருணாகரன் தலைமை தாங்கினார்.

இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்புதந்த மக்களுக்கும் நல்ல திட்டங்களை கொண்டு வந்து அவர்களை வாழ வைக்க வேண்டும் என்று நினைக்காமல், நாள்தோறும் கழக அரசை பற்றிக்குறை கூறுவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தி.மு.க.வினரை தோற்கடித்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்பதையே உயிர்மூச்சாக கொண்டு, கழக தொண்டர்கள் அனைவரும் கண் துஞ்சாது களப்பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 10 ஆண்டு காலம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி வந்த பொற்கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தது கழக அரசு.

தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை நினைத்து வாக்களித்த மக்களுக்கு தி.மு.க அரசு ஏமாற்றத்தையே பரிசாக அளித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் 3 சதவீதம் மட்டும் தான்
வாக்கு வித்தியாசம்.

தி.மு.க அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் இன்று அவதிப்படுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தி.மு.க.வினர், நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே நீட்டுக்கு விலக்கு, ஏழு பேர் விடுதலையை ஏழே நாட்களில் செய்வோம் என்றும், அடகு வைத்த நகைகளை எல்லாம் திருப்பி தருவவோம் என்று ஆசை வலைகளை விரித்தும், சிலிண்டருக்கு மானியம் என்று சீட்டிங் செய்வது, மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு,

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்ததி, கூலியையும் உயர்த்திக் கொடுப்போம் இப்படி இன்னும் எண்ணற்ற வாக்குறுதிகளை ஏழை, எளிய மக்களிடம் அள்ளி விட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்னும் பித்தலாட்டங்கள் குறித்து தமிழக மக்கள் கேள்வி எழுப்புவார்களே என்கிற சங்கடம் தி.மு.க.விடம் கடுகளவும் கிடையாது.

அம்மா அவர்களின் அரசு, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியது. ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்ததும், கழக அரசின் திட்டங்களை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டத்தையும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இப்படி கழக அரசின் பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு முடக்கி வருகிறது.

கழகத்தின் கடைசி தொண்டனாலும், கட்சிக்கு தலைவனாக முடியும் என்பதற்கு அ.தி.மு.க.வே சாட்சி என்றால், மறைந்த கருணாநிதி குடும்பத்தை தவிர, வேறு யாராலும் தி.மு.க தலைவர் பதவியை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாது என்பதற்கு சாட்சியாக தி.மு.க விளங்குகிறது. காவல்துறையினருடன் மோதல்,

அரசு அதிகாரிகளுடன் அடாவடிகளில் ஈடுபடுவது என தி.மு.க அமைச்சர்களின் அடாவடித்தனமான பேச்சுக்கள் அனைத்தும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. எதிரியாக இருந்தாலும் அரசியல் என்று வந்து விட்டால் மரியாதையாகவே பேச வேண்டும்.

மரியாதையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் சொல்லை மீறி அவமரியாதை மற்றும் அவதூறு அரசியலை நடத்தி வருகிறது தி.மு.க அரசு. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தையும், கழகத்தையும் அழிக்க கூட்டுச்சதி செய்து நாள்தோறும் பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.விற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி.சி.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ, மின்னல் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.