தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் சபதம்
தேனி
எடப்பாடியாரின் ஆணைக்கேற்ப பெருந்திரளாக பங்கேற்போம். விடியா தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகப்பெரிய எழுச்சியோடு நடத்துவோம் என்று தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய பேரூர் நகர மாவட்ட ஊராட்சி ஒன்றிய செயலாளர் பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கழக நிர்வாகிகள் பேசுகையில், குடும்ப அரசியல் தலையீடு இல்லாமல் முதல்முறையாக சுதந்திரமாக தேனி மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் தி.மு.க அரசின் மக்கள் விரோத போக்கு, மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்ற வரி உயர்வுகளால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆகையால் கழக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க பிரதான கழகம் சார்பில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய எழுச்சியோடு கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் கூட்டுறவு மாநில தலைவர் எல்லப்பட்டி முருகன், வடபுதுப்பட்டி தலைவர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


















