• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கும் எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கும் எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

September 3, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கும் எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

by Namadhu Amma
September 3, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கும் எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்றும், இது மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்

ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையொட்டி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை புரட்சித்தலைவர் தொடங்கி தொடர்ந்து வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார்.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வை அம்மா அவர்கள் மூன்றாவது பெரிய மக்கள் இயக்கமாக மாற்றினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லாத நிலையை அம்மா உருவாக்கினார்.

அம்மாவின் மறைவுக்கு பிறகு மகத்தான இந்த மக்கள் இயக்கத்தை எடப்பாடியார் காப்பாற்றி, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றி வழி நடத்தினார். ஒன்றரை கோடி தொண்டர்களை ஒருங்கிணைத்து அம்மாவின் கனவை நனவாக்கினார் எடப்பாடியார்.

இந்த இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். பல்வேறு சாதனைகளை செய்து மக்கள் நெஞ்சங்களில் நிறைந்த தலைவராக எடப்பாடியார் திகழ்கிறார். தாய்தமிழ் நாட்டு மக்கள் பாதுகாவலரான இருக்கும் எடப்பாடியாருக்கு நீதியரசர்கள் தந்த மகத்தான தீர்ப்பு இந்த தீர்ப்பாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மா எடப்பாடியாரிடம் உள்ளது என்பதை காட்டும் வகையில் நீதிபதிகள் கொடுத்தது தான் இந்த தீர்ப்பு.

இந்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. கிளைக் கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடியாருக்கு ஆதரவு உள்ளது. அ.தி.மு.க.வின் பெருமைகளை கட்டிக்காக்க தொண்டர்கள் தயாராக உள்ளார்கள். எடப்பாடியாரின் நல்ல நோக்கத்திற்காக கிடைத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மா எடப்பாடியாரிடம் உள்ளது என்பதை காட்டுகிறது.

மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. இனி வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு ஆகும். பொதுக்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 99 சதவீதம் பேரின் ஆதரவு எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது. எடப்பாடியாரின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் வயையில் இந்த தீர்ப்பு உள்ளது.

எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. ஒரு இயக்கம் ஒரு தலைவருக்கு தன்னிச்சையாக தருகிற ஆதரவு போல எடப்பாடியாருக்கு தான் உண்டு. எடப்பாடியாருக்கு இருக்கும் செல்வாக்கை தெரிந்தும், தெரிந்து கொள்ளாமலும், இருப்பவர்களுக்கு காலம் தக்க பாடம் புகட்டும்.

தி.மு.க.வை வலுவுடன் எதிர்த்து, மீண்டும் அம்மாவின் புனித ஆட்சியை எடப்பாடியாரால் மட்டுமே வழங்க முடியும் என்று தொண்டர்களும், மக்களும் எதிர்பார்த்து வருகின்றனர். மக்களின் எண்ணமும், தொண்டர்களின் எண்ணமும் நிச்சயம் நிறைவேறும். அதற்கு இந்த தீர்ப்பே அத்தாட்சி. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் தான் இந்த இயக்கத்தின் அத்தியாயம் ஆகும்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

அதைத்தொடர்ந்து இது இறுதி தீர்ப்பா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த தீர்ப்பு மூலம் வெட்ட வெளிச்சாக தெரிகிறது. அறிந்தும் அறியாதது போல, தெரிந்தும் தெரியாதது போல உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது. எடப்பாடியார் தலைமையில் கழகம் மக்கள் பணியாற்ற தயாராக இருக்கிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.

பேட்டியின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, நெல்லை பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.