• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழகத்தை வழி நடத்த எடப்பாடியாருக்கு தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு

கழகத்தை வழி நடத்த எடப்பாடியாருக்கு தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு

July 4, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>மதுரை|மற்றவை

கழகத்தை வழி நடத்த எடப்பாடியாருக்கு தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு

by Namadhu Amma
July 4, 2022
in மாவட்ட செய்திகள்>மதுரை|மற்றவை
0
கழகத்தை வழி நடத்த எடப்பாடியாருக்கு தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேச்சு

மதுரை

ஒற்றை தலைமையை ஏற்று கழகத்தை எடப்பாடியார் வழி நடத்த தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்று கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் கூறி உள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிளை கழக நிர்வாகிகள் ஒற்றை தலைமை தான் வேண்டும். அந்த ஒற்றை தலைமையை ஏற்க எடப்பாடியார் வர வேண்டும் என்று தங்கள் ஆதரவை கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போடி, உத்தமபாளையம், சின்னமனூர் போன்ற பகுதியில் உள்ள கழக நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றிய கழக செயலாளர் இளையநம்பி, ஒன்றிய பொருளாளர் மார்க்கண்டேயன், அணைப்பட்டி காசிமாயன், கம்பம் எம்.ஆர்.ஈஸ்வரன், கோகிலாபுரம் கல்யாணசுந்தரம், ஆண்டிபட்டி பொன் முருகன், சி.ஆர்.ராஜா, எஸ்.குள்ளப்பன், செல்வராஜ், செல்வம், எஸ்.எஸ்.புரம் ரத்தினம், ஒத்தப்பட்டி ஆதீஸ்வரன், அனுப்பட்டி ராஜேந்திரன், பொம்மிநாயக்கன்பட்டி லோகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அவர்கள் மத்தியில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை 1972ம் ஆண்டு ஆரம்பித்தார். ஆரம்பித்தது முதல் இதுவரை 11 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். இதில் ஏழு முறை மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பிலிருந்து உள்ளோம். புரட்சித்தலைவர் காலத்தில் மூன்று முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 48 இடங்கள், 38 இடங்கள், 28 இடங்கள் என்ற அளவில் தான் வெற்றிபெற்றனர் என்பதை நாடு அறியும்.

அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 1991 2001, 2011, 2016 ஆகிய நான்கு முறை சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மட்டுமல்லாதது நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று இந்தியாவிலேயே மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை புரட்சியை அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கம் தான் இந்த இயக்கம். புரட்சித்தலைவர் காலம் தொட்டும் புரட்சிதலைவி அம்மா அவர்கள் காலம் தொட்டும் ஒற்றை தலைமையோடு மிகப்பெரிய வலிமை மிக்க கட்சியாக, ஆளுங்கட்சியாக, சில நேரம் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு உள்ளது இந்த இயக்கம்.

அம்மாவின் மறைவுக்கு பின் எடப்பாடியார் ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கரை ஆண்டு காலம் மிகச்சிறந்த ஆட்சியை தமிழகத்தில் கொடுத்தார். மக்கள் எல்லாம் போற்றுகின்ற வகையில், வாழ்த்துகின்ற வகையில் திறமையான நல்லாட்சியை நடத்தினார். ஒரேஆண்டில் 11 மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தார்.

அது மட்டுமல்லாது இந்தியாவிலேயே உள்ளாட்சித்துறையில் மிக அதிகமான விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம் இருந்தது மேலும் கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை இப்படி அனைத்து துறையிலும் பல சாதனை படைத்து இந்தியாவிலேயே முதன்மையாக உருவாக்கினார்

வேளாண்மை துறையில் தொடர்ந்து பல ஆண்டுகாலம் மத்திய அரசை விருதினை பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது எடப்பாடியார் சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை தமிழக மக்களிடம் பெற்றார் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்தியாவில் எந்த கட்சிக்கும் இரட்டை தலைமை இல்லை. இரண்டு தலைமை இருந்தால் பிரச்சினைக்கு முடிவு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அந்த காலதாமதத்தை போக்க ஒற்றைத்தலைமை தான் வேண்டும்

தற்போது உள்ள சூழ்நிலையில் கழகத்தில் இரட்டை தலைமை சரியாக வராது என்று கழக அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் எண்ணுகிறார்கள். ஏன் என்று சொன்னால் கட்சி நிர்வாகத்திற்கும் இரட்டை தலைமையினால் பல நடைமுறை சிக்கல் உள்ளது. கொள்கை முடிவு எடுப்பதில் பல சமயங்களில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நடைமுறை சிக்கலை போக்க இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அந்த ஒற்றைத்தலைமைக்கு எடப்பாடியாரை தேர்வு செய்ய வேண்டும் என்று தலைமை கழக நிர்வாகிகள் முதல் மாவட்ட கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் என 96 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

தற்போது கூட தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும் கழக நிர்வாகிகள் நாள்தோறும் வருகை தந்து கழகத்திற்கு எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிச்சயம் தொண்டர்களின் தீர்ப்பை ஏற்று எடப்பாடியார் ஒற்றை தலைமையை ஏற்பார். இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்துவார்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.