சென்னை
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குமாரபாளையம் தாலுகா புதியதாக அறிவிக்கப்பட்டு அதற்கு, அலுவலக கட்டடம் கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டு, கட்டடம் கட்டிக்கொண்டிருந்த கால கட்டத்தில், ஆற்றுக்கு அருகாமையில் இருக்கின்ற காரணத்தினால் நிதி இல்லாமல் ஓராண்டு காலமாக நிற்கின்றது.
அந்த நிதி வேண்டும் என்று அரசுக்கு கோப்புகள் வரபெற்றுள்ளது. ஆனால் ஓராண்டு காலமாக அந்த நிதி ஒதுக்கப்படாமல் இருக்கும் காரணத்தினால், நிதி ஒதுக்கி அந்த கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
















