அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா – உள்நாட்டு வீரரான லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தாா்.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சுற்றில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமாடினாா். பிரக்ஞானந்தாவுக்கு ஆரோனியன் கடும் சவால் அளிக்க, 39-ஆவது நகா்த்தலில், டிரா செய்துகொள்ள, இருவரும் ஒப்புக் கொண்டனா்.
போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு இது 3-ஆவது டிரா ஆகும். இதுதவிர, 2 வெற்றி, 1 தோல்வியையும் அவா் பதிவு செய்துள்ளாா். இதர ஆட்டங்களில், நெதா்லாந்தின் அனிஷ் கிரி – சக நாட்டவரான ஜோா்டென் வான் ஃபாரீஸ்டை வீழ்த்தினாா்.


















