கோவையில் நேற்று பெய்த கனமழை காரணமாக, குனியமுத்தூர், பி.கே.புதூரை அடுத்துள்ள இ.பி. காலனி குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து தர நடவடிக்கை எடுத்தார்
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை விரைந்து வெளியேற்றவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.





















