சென்னை, அக்டோபர் 17,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, இன்று (அக்டோபர் 17) திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.





















