மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி சமூக வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போராடி, தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, நாட்டு மக்களின் நெஞ்சங்களில் விடுதலை வேட்கையை விதைத்த வீரத்தின் அடையாளம் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள்!
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னுயிரையே அர்ப்பணித்து, வீரத்திற்கும், துணிச்சலுக்கும், தேசப்பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுதினமான இன்று, அவரது ஈடு இணையற்ற வீரத்தையும், மகத்தான தியாகத்தையும் நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்





















