• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு விதிகளை தமிழில் வெளியிடாதது ஏன்?-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

June 3, 2022
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

October 15, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு விதிகளை தமிழில் வெளியிடாதது ஏன்?-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

by Namadhu Amma
June 3, 2022
in தமிழகம்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு விதிகளை தமிழில் வெளியிடவில்லை. தி.மு.க. அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று அயல் நாட்டு மொழிகள் உட்பட பல மொழிகளை கற்றறிந்த மகாகவி பாரதியார் கூறுகிறார் என்றால், அந்த அளவுக்கு தமிழ் மொழியிலே இனிமையும், இசையும், ஓசையும், சொல்லாற்றலும் இருக்கிறது என்பது தான் பொருள்.

இப்படிப்பட்ட தமிழ் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதிலும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறிக்கொள்வதிலும் முனைப்பு காட்டும் முதலமைச்சர், தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் முதலமைச்சர், தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் சட்ட விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கின்றாரா என்றால் இல்லை.

மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கி நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை உருவாக்கி உள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், ஊதிய சட்டத்தொகுப்பு விதிகள், தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு விதிகள்,

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு விதிகள் ஆகிய மூன்று சட்ட தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் தமிழ்நாடு அரசின் அசாதாரண அரசிதழில் 11-04-2022 அன்று ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான தமிழாக்கம் வெளியிடப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், ஊதிய சட்டத்தொகுப்பு விதிகள் மற்றும் தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு விதிகள் குறித்த தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்ற மாத இறுதியில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும்,

கூட்டத்திற்கான அறிவிப்பு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தால் தமிழில் அனுப்பப்பட்ட நிலையில், மாநில வரைவு விதிகளின் தமிழாக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த தொழிற்சங்கங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

தமிழ் மொழியில் மாநில அரசின் வரைவு விதிகள் வழங்கப்பட்டால் தான், 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்றும்,

மாநில வரைவு விதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை ஒவ்வொரு தொழிலாளியும், தொழிற் சங்கங்களை சார்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவை தமிழில் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் என்றும், அப்பொழுது தான், சட்ட தொகுப்புகளில் உள்ள முக்கிய அம்சங்களை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தொழிலாளர் நல அதிகாரிகளுடன் கலந்துரையாடி,

ஆலோசனைகளைத் தெரிவிக்க முடியும் என்றும், சம்பிரதாயத்திற்காக கூட்டத்தைக் கூட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொழிலாளர்களும், தொழிற்சங்க வாதிகளும் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் ஐம்பது பக்கம், நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு தொகுப்பையும் சாதாரண தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் படித்து புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று.

மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தொழிலாளர்களுக்கான சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிடாத தி.மு.க. அரசின் நடவடிக்கை ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்பது போல் உள்ளது. ஒரு வேளை இதுவும் ‘திராவிட மாடல்’ போலும்! தி.மு.க. அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, மேற்படி மூன்று மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடவும், இனி வருங்காலங்களில் ஆங்கில விதிகள் வெளியிடப்படும் அதே சமயத்தில் அதற்கு இணையான தமிழாக்கம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.