• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகம் – கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

March 31, 2022
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

October 15, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகம் – கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

by Namadhu Amma
March 31, 2022
in சிறப்பு செய்திகள்
0
தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தேவி-பாபு. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ள அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 34-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சர்மிளா காந்தி, அவரது கணவர் கருணாநிதி ஆகியோர் தங்கள் அலுவலகத்திற்கு வருமாறு தேவி-பாபு தம்பதியை நேற்று அழைத்துள்ளனர்.

அதன்படி தேவியும், அவரது கணவரும், கவுன்சிலரின் அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு அவர்களிடம், தற்போது கட்டுமான பணி நடைபெற்று வரும் இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், மூன்று அடி தூரம் தள்ளி கட்டடம் கட்டுவதால் அதனை உடனே நிறுத்த வேண்டும் எனவும் தி.மு.க. கவுன்சிலரின் கணவரான கருணாநிதி கூறியுள்ளார்.

இல்லையெனில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கட்டத்தை இடித்து அகற்றுவேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.அதற்கு சம்பந்தப்பட்ட அந்த இடம் எங்களது பெற்றோர் வாங்கியது என்றும், அதற்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் இருப்பதாக தேவியும், அவரது கணவரும் தெரிவித்தனர்.

மேலும், அந்த ஆவணங்களை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்து அதற்கான வரைபடத்தையும் பெற்றுள்ளதால் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என அவர்கள் தரப்பு நியாயத்தை விளக்கிக் கூறினர்.

ஆனால் அதை ஏற்காமல் தி.மு.க. கவுன்சிலரான சர்மிளா காந்தி, அவரது கணவர் கருணாநிதி ஆகியோர் தம்பதியை மிரட்டி இருக்கிறார்கள். கவுன்சிலராக இருக்கிறேன் என்பதால் எங்களை மிரட்டுவதா என்று தேவி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கவுன்சிலரின் கணவர் கருணாநிதியின் ஆதரவாளர்கள் தேவிக்கு மிரட்டல் விடுக்கு் தொணியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. கவுன்சிலர்கள் உருட்டு, மிரட்டல் செயல்களில் ஈடுபடுவது அம்பலமாகி இருக்கிறது.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல் மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள்.

மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த தி.மு.க. அரசு?

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபால் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கவுன்சிலராக பொறுப்பேற்று முதல் கூட்டம் கூட நடக்கவில்லை. முதல் கூட்டம் நடக்காத நிலையிலே உள்ளாட்சித் தேர்தலில்
வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களின் அட்டராசிட்டிஸ் ஆரம்பம் ஆகிவிட்டது.

34-வது வட்டம் கொடுங்கையூரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதை சமூக ஊடகத்தில் பார்த்திருப்பீர்கள். ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டிலேயே நகை திருட்டு நடந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், நடக்கிறது.

இப்போதுதான் கஞ்சாவை பிடிக்க 2.0 திட்டமாம். இதற்கு முன்னாடி என்ன ஜீரோ திட்டமா. கஞ்சா அதிக அளவில் நடமாடுகிறது என்று காவல்துறை தலைவரே ஒத்துக்கொள்கிறார். அரசே ஒத்துக்கொள்கிறது. இதுதான் நிதர்ச்சமான ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.