• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

ஓ.பன்னீர்செல்வம் செயல் சட்டத்திற்கு புறம்பானது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

September 22, 2022
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

October 15, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் செயல் சட்டத்திற்கு புறம்பானது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

by Namadhu Amma
September 22, 2022
in சிறப்பு செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்திலே 2532 பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்களையும் தாக்கல் செய்திருந்தோம். நாங்கள் அளித்த அபிடவிட் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்வதற்காக வந்தோம்.

ஆனால் இதற்கு இடையிலே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு 11.7.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும்.

பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பின் நகலையும், இன்றைய தேதி வரை கழகத்தின் 11ம்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்துகொண்டு பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்டையும் இன்றைக்கு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.

விரைந்து இதன் மீது நடவடிக்கை எடுத்து, அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்று அதனை தங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் இன்னும் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே அறிக்கை வெளியிட்டு வருகிறாரே

பதில் : இது மிகவும் தவறான செயல். சட்டத்திற்கு புறம்பான செயல். முதலமைச்சராக இருந்தவர். சட்டத்தின் விதிமுறைகளை மீறி செய்யக்கூடிய ஒரு செயல். அவருடைய செயல் ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. ஒரு முதலமைச்சராக இருந்தவர் குண்டர்களையும், ரவுடிகளையும் அழைத்துச்சென்று தனக்கு எந்த இயக்கம் பதவி அளித்ததோ, முதலமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்ததோ,

அந்த அலுவலகத்தை எட்டி உதைத்து சூறையாடி, அங்கு இருந்த ஆவனங்களை திருடி சென்ற அப்படிப்பட்ட நபர் இதுபோன்ற தவறான செயல் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லை. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் எல்லாம் முடிந்த பிறகு இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி :ஓ.பன்னீர்செல்வம் தான் உண்மையான அதிமுக என்று ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளாரே.

பதில் : இவை தவறானது. அவர் நான் தான் உண்மையான அதிமுக. பொதுக்குழு என் பின்னால் தான் இருக்கிறது. எனக்கு இத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று எந்த இடத்திலும் கடிதம் அளிக்கவில்லை. என் பின்னால் தான் அதிமுக இருக்கிறது என்ற எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை. நான் தான் ஒருங்கிணைப்பாளர், நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கிளிப்பிள்ளை போல சொல்லி வருகிறார்.

அந்த ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது ரத்தாகி விட்டது. 13ம்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு,

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் 2532 பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 61 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அதிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவர் மகன். வேறு எங்கும் அவர் போக முடியாது. அவர் எங்கேயும், எந்த இடத்திலும் தான் தான் அதிமுக என்று எந்த ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை.

கேள்வி : ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஏதாவது கோரிக்கை வைத்துள்ளீர்களா?

பதில் : நாங்கள் அந்த கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தான் அதிமுக. பொதுக்குழு முறையாக, சட்டப்படி கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு அதற்கான ஆதாரங்களை அளித்துள்ளோம். பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு வெளியிட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.