சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் பயணித்த சொந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் வந்துகொண்டிருந்த நிலையில், அவருக்குப் பின்னால் அவரது குடும்பத்தினர் சென்ற சொந்த கார் வந்துள்ளது. காட்டாங்குளத்தூர் அருகே இந்த கார், இருசக்கர வாகனத்தில் சென்ற இறையன்பு என்பவர் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காரை ஓட்டி வந்த சின்ன அக்னி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















