‘மஹாவீர் கர்ணா’ முதல் தோற்றம் வெளியீடு
நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ‘மஹாவீர் கர்ணா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு நன்றி. பணிவுடனும் நன்றியுடனும் இந்தப் பயணத்தை தொடங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரமேஷ் வர்மாவும் தனது எக்ஸ் பதிவில், “ஒரு முகம், ஓர் ஆளுமை, ஒரு வீரன்… மஹாவீர் கர்ணாவாக ராகவா லாரன்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பென் மூவீஸ், ஸ்ரீநீலத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். ராம்ஜி டாட் ஒளிப்பதிவு செய்ய, ஞானி இசையமைக்கிறார். ஸ்ரீமணி வசனம் எழுதுகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது.





















