
பாவிக்கும் ஆவிக்கும் இடையிலான மோதலையும், எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் இணையும் உண்மையான காதலையும் மையமாகக் கொண்டு உருவாகிறது ‘மறுஜென்ம காதல்’ திரைப்படம். இந்தியன் டிஜிட்டல் பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை வித்யா பிரேம் தயாரிக்கிறார். வந்தை பிரேம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறுபட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் E.V. கணேஷ் பாபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கிரியேட்டிவ் இயக்குநராக K.S. விஜயபாலன், ஒளிப்பதிவாளராக வி.சத்யகண்ணன், இசையமைப்பாளராக சார்லஸ் தனா, எடிட்டராக லெனின் பணியாற்றுகின்றனர். நடனம் ஜோசப் கென்னடி, சண்டைப் பயிற்சி கிளாசிக் பாபு, கலை இயக்கம் ராஜா கண்ணதாசன் மேற்கொள்கின்றனர். மக்கள் தொடர்பு பணிகளை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
காதல், மறுஜென்மம், ஆவி மற்றும் மோதல் என வித்தியாசமான அம்சங்களுடன் உருவாகும் ‘மறுஜென்ம காதல்’ திரைப்படம், தொடக்க விழாவிலேயே கவனம் ஈர்த்துள்ளது.





















